நேபாளத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து ஐந்து மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள கைலாலி மாவட்டத்தின் வனப்பகுதியிலுள்ள அரசு நிலத்தை மாவோயிஸ்டுகள் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் வீடு இல்லாத ஏழை மக்களாவர்.
அரசு உத்தரவைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்து காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் மறுத்தனர்.இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 30 க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
இந்நிலையில், காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து சுற்றுப் பகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
இதன் காரணமாக அம்மாவட்டங்களில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தொடர்ந்து அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பாதுகாப்பு படையின் நடவடிக்கையை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு மாவோயிஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது
No Response to "நேபாளம்: காவல் துறையை கண்டித்து 'பந்த்'"
Post a Comment