மன்னாரில் இருந்து மதவாச்சி சோதனைச்சாவடியூடாக தென் பகுதிக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் தற்போது தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றது.
இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் மன்னாரிலிருந்து மதவாச்சி சோதனைச்சாவடியூடாக தனியார் பயணிகள் பஸ் ஒன்று தெர்கிற்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்தார்.
சுமார் இரண்டு வருடத்துக்குப் பின் மன்னாரிலிருந்து மதவாச்சியூடாக தென்பகுதிக்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No Response to "மன்னார்-மதவாச்சி சோதனைச்சாவடியூடான போக்குவரத்து சேவை ஆரம்பம்"
Post a Comment