இலங்கையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்று முதல், சுதந்திரமான முறையில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சுதந்திரமான நடமாட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும் போது படையினர் எவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பர் என்ற விவரங்கள் தெரியவரவில்லை.
முகாம் மக்கள், தமது முகாமில் இருந்து ஏனைய முகாம்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்களா? அல்லது, ஏனைய வெளிப்பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற விவரங்களும் தெரியவரவில்லை.
No Response to "வவுனியா முகாம்களில் இன்று முதல் சுதந்திரமான நடமாட்டம்"
Post a Comment