இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது.
கூட்டத்தில் பேசிய பின்னர், தன்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டவர்களுக்கு பெர்லுஸ்கோனி கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த தருணத்தில், கூட்டத்தில் இருந்த மஸ்ஸிமோ டர்டாக்ளியா என்ற 42 வயதான நபர் பெர்லுஸ்கோனியின் மீது சிலையை வீசி எறிந்தார்.
இதில் பெர்லுஸ்கோனியின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. இந்த திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்த பெர்லுஸ்கோனியை அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்றிரவு முழுவதும் மருத்துவமனையில் பெர்லுஸ்கோனி மருத்துவமனையில் இருந்தார்.
தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில், மூக்கு மற்றும் ஒரு பல் உடைந்ததுடன், கீழ் உதடு பகுதியிலும் பிளவு ஏற்பட்டதால் பிரதமரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No Response to "மனநலம் குன்றியவர் தாக்கியதில் இத்தாலிய பிரதமரின் பல் உடைந்தது"
Post a Comment