இலங்கையில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டனின் அயலுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனைத்து மனிதாபிமான அமைப்புகளும் சென்று வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
No Response to "இடம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரிட்டன்"
Post a Comment