ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திடம் கேட்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவது குறித்த தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா அன்னப்பறவை சின்னத்தில்

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவார் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, கனடா இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-கனடா நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும், கனடா பிரதமர் கார்பரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியா இதுவரை கனடா உள்பட அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, மங்கோலியா, கஜகஸ்தான், அர்ஜென்டினா, நமீபியா ஆகிய எட்டு நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து, கடந்த 34 ஆண்டுகளாக நீடித்த இந்தியா மீதான தடையை கடந்த ஆண்டு செப்டம்பரில் அணுவை சப்ளை செய்யும் நாடுகள் தளர்த்தின.

இதன் மூலம் இந்தியா அணுவை சப்ளை செய்யும் நாடுகளும் ஒப்பந்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் - சரத் பொ‌ன்சேகா

இறுதிக் கட்ட போ‌ரி‌ன்போது வன்னியிலுள்ள தமிழ் மக்களைகளை கொன்றுகுவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக மு‌ன்னா‌ள் இராணுவ‌த் தளப‌தி சரத் பொன்சேகா கூறியுள்ளார்

இல‌ங்கை‌யி‌ல் அ‌தி‌ப‌ர் தேர்தல் ஜனவரி 26 ஆம் தே‌தி ன அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ள நிலையில் சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று அ‌திகார‌ப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



ஆனால் அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்ககை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்

இச்செய்தியாளர் தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் பொ‌ன்சேகா அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார்அதற்கு,வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

அதிபர் தேர்தலில் த.தே.கூ தனி வேட்பாளரை நிறுத்த திட்டம் ?

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக அக்கட்சியின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும், இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்ணவும் போட்டியிட உள்ள நிலையில், த.தே.கூ சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக த.தே.கூ மூத்த தலைவர்கள், பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதேவேளை, த.தே.கூ சார்பில் அதிபர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 




த.தே.கூ நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




போரால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ள தமிழ் மக்கள், அதிலும் குறிப்பாக தடுப்பு முகாம்களிலுள்ள மக்களுக்கு ராஜபக்ச மீதோ அல்லது சரத் பொன்சேகா மீதோ நம்பிக்கை இல்லை.




அவர்கள் வேறொரு வேட்பாளரை எதிர்பார்ப்பதாலேயே தாம் இவ்வாறு ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பணி ஆரம்பம் கிழக்கில் 9,95,612 பேர் வாக்களிக்கத் தகுதி

கிழக்கு மாகாணத்தில் 9 இலட்சத்தி 95 ஆயிரத்தி 612 பேர் அடுத்துவரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 2 இலட்சத்தி 41 ஆயிரத்தி 133 பேர் தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 86685 பேரும் சேருவில தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 69047 பேரும் இதில் அடங்குவர்.


அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்தி 20 ஆயிரத்து 835 பேர் தகுதிபெற்றுள்ளனர். இதன் படி அம்பாறை தேர்தல் தொகுதியில் ஓர் இலட்சத்து 45 ஆயிரத்தி 479 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 71 ஆயிரத்தி 442 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 66 ஆயிரத்தி 135 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒர் இலட்சத்து 37 ஆயிரத்தி 779 பேரும்  வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்தி 33 ஆயிரத்தி 644 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.  மட்டக்களப்பு தொகுதியில் ஒர் இலட்சத்து 55 ஆயிரத்து 135 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 80 ஆயிரத்து 972 பேரும் இதில் அடங்குவர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார். பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதால் அதற்கு முன்னராக தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியரின் விபரங்கள் திரட்டப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் அதற்கான படிவங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிபடவைக்கப்படவுள்ளதாக கூறினார்.

தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் மற்றும் ஏனைய தினைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் விபரங்களை திரட்டுவதற்கான படிவங்கள் என்பனவற்றை கொழும்பு தேர்தல் அலுவலகத்திலிருந்து எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்


ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் பேசுகையில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென எமது கட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது.அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம்.முதலில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.


இதன் பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றார்.இதன் போது புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர விளக்கமளிக்கையில் கூறியதாவது;எமது பொது வேட்பாளர் இராணுவ சீருடையை களைந்து அரசுக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதியாகவுள்ளார்.சமையல் அறையிலிருந்த திருமதி பண்டாரநாயக்கவால் நாட்டை நிர்வகிக்க முடியுமாயின் ஏன் சரத் பொன்சேகாவக்கு முடியாது.


ஐக்கிய தேசிய முன்னணி மீதும் பொது வேட்பாளர் மீதும் புலி மற்றும் தேசத்துரோகியென முத்திரை குத்த முற்படவேண்டாமென அரச கோருகின்றேன். இதை மீறினால் நாம் கையைத் தூக்கி பேச வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அயல்நாட்டு தூதரகங்கள் அதிகமுள்ள இடத்தில் இன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

அயல் நாட்டு தூதரகங்கள் மற்றும் நிறுவனங்கள் நிறைந்த வாஷிர் அக்பர் கான் என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. 

அதே சமயம் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தின் சுவர் இலேசாக சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றபோதிலும், தாலிபான் இயக்கம்தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

350 பேரை இன்னும் காணவில்லை- சவூதியில் வெள்ள அனர்த்தம்

ஜெத்தா நகரில் பெய்ந்த கடும் மழை காரணமாகவும் அங்கு ஏற்பட்ட மண் சரிவுகளினாலும் இதுவரை வெள்ளிக்கிழமை 85 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அல் குவாஸி நகரல் 88 பேரின் சடலங்கள் கண்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 1251  பேர் வீடுகள் சொத்துக்களை இழந்திருப்பதாகவும் அரபு நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த மீட்புப் பணிகள் இதுவரை முடிவடையாமையால் சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதுடன் சரியான அனர்த்த முகாமைத்துவம் சரியான முன்னெடுக்கப்படவில்லை என சவூதி வாழ் மக்கள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் சவூதியில் பெஸ் புக்கைப் பாவிப்பவர்களும் தங்களின் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரபு நியூஸ் அனர்த்த முகாமைத்துவத்தை நக்கலடித்து ஒரு காட்டூனை வெளியிட்டுள்ளது
வாசகர்களின் பார்வைக்கு


நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் வழக்கறிஞர் கஸாப்

மும்பைத் தாக்குதல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி அஜ்மல் கஸாப்பிற்காக வாதாடும் அப்பாஸ் கஸ்மி, வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் இன்று நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். 

மும்பைத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை அரசு தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பற்றி தனக்கு கவலையில்லை என்று அஜ்மல் கஸாப் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் கஸ்மி நேற்றைய வழக்கு விசாரணையின் போது கூறினார். 

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி எம்.எல்.தஹலியானி, “கஸ்மி ஒரு பெய்யர் எனக் குறிப்பிட்டார். 

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய கஸ்மி, “மும்பைத் தாக்குதல் வழக்கு சரித்திரச் சிறப்பு வாய்ந்தது என்பதால், கஸாப்புக்கு ஆதரவாக என்னால் முடிந்தவரை சிறப்பாக வாதாடி வருகிறேன். நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் போது ஏற்பட்ட சூடான விவாதம் காரணமாக நான் பொறுமையிழந்து சில வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளேன்” என்றார். 

கஸ்மியின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.எல்.தஹலியானி, கஸ்மி ஒரு பெய்யர் என்று தாம் கூறியதையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதியளிக்கும் சட்ட முன்வரைவு பிரான்ஸ் தேச அவையில் நிறைவேறியது.

இத்தகவலை வெளியிட்ட இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரகம், “இந்தியா- பிரான்ஸ் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளிக்கும் சட்ட வரைவை பிரான்ஸ் தேச அவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்திய-பிரான்ஸ் அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதியளிக்கும் சட்டத்தை அந்நாட்டின் செனட் அவை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அணு உலைகளை இந்தியாவில் நிறுவ, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் ஜைதாப்பூரில் பிரான்ஸ் நாட்டின் 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைக்க, பிரான்ஸ் நாட்டின் ஆரேவா நிறுவனத்திற்கு இந்தியா ஒப்பந்தம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு

வருகிற 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறி செயல்படும் ஒரு நாட்டில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மேற்கிந்திய தீவில் தொடங்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் அவர் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆஸ்ட்ரேலியாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை அரசாஙங்ம் வன்னியில் மேற்கொண்ட மனிதப்பேரழிவுகள் குறித்தும் அதனை தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது

ஜனவரி 26ல் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியை தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார் தற்போதைய ஜனாதிபதி.



அதன்படி ஜனவரி 23 ல் அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே அதிபர் தேர்தலை வருகிற ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த இலங்கை தேர்தல் ஆணையம், இன்று ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இத்தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து எதிர்கட்சிகளின் சார்பில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவரைத்தவிர புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, தாமும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்

சவூதியில் மழை வெள்ளம் : 77 ஹஜ் பயணிகள் பலி !

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா அருகே நேற்று பெய்த திடீர் மழை காரணமாக புனித ஹஜ் யாத்திரை வந்த 77 ஹஜ் பயணிகள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் இருந்து சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் 3 லட்சத்திற்கு அதிகமான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், கடைசி நாளான நேற்று மெக்காவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் உள்ள ஜித்தா நகரில் பலத்த மழை பெய்தது. 

இதனால் வீதிகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பல வீடுகள் இடிந்து நாசமாயின.பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மெக்கா செல்லும் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த் மழை வெள்ளத்தில் சிக்கி ஹஜ் பயணிகள் 77 பேர் உயிரிழந்தனர்.இவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். 

மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தத் தகவலை ஜித்தா சிவில் பாதுகாப்பு தலைவர் அப்துல்லா அல்-அமீர் தெரிவித்தார். 

மெக்கா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன

சீமான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

கனடாவில் கனடா போடர் சேவிஸ் ஏஜேன்ஸி கைதுசெய்யப்பட்ட செபஸ்டியன் சீமான் மறைந்த பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு நேற்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பிக்குமாறும் மற்றும் சிங்களர்வர்கள் அனைவரையும் கொலை செய்யவேண்டும் எனவும் இவர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தங்கள் சொந்த இடங்களுகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்றுடன் யாழ்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் அமைவரும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்தப்பட்டுள்ளதாக இன்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் படி யாழ்பாணத்திலிருந்து குடிபெயர்ந்த மக்கள் எவரும் மெனிக் பாம் முகாமில் இல்லை என அது தெரிவித்துள்ளது.


மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சின் தகவல்களின்படி இதுவரை வவுனியா, மன்னார், புல்மூடை (திருகோணமலை) யிலிருந்து 59,475 பேர் யாழ்பாணத்தில் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.காலித்தீன் தெரிவிக்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நவம்பர் 25 யில் 121,617 ஆக குறைந்துள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறையில் இருந்து இடம்பெயர்த அனைவரும் மீள் குடியேற்றப்பட்டு அவர்கள் சாதாரண வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.
மீதியாக முகாம்களில் உள்ளவர்களுக்கும் டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

ஜெனரல் சரத்பொன் சேகாவை ஆதரிப்பதென ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஜனாபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவிருக்கும் ஜெனரல் சரத்பொன் சேகாவை ஆதரிப்பதென ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானித்திருப்பதாக தெரிவித்த கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலை கட்சி குடும்பஆட்சியை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். எதிரணிகள் எடுத்திருக்கும் இந்த முடிவு "மெதமுலன%27 அதிகாரத்தை உலுக்கியிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய செயற்குழுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை கட்சித்தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கும் கூடுதலான நேரம் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஸ்ரீ கொத்தாவில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார்.



கட்சியின் யாப்பு விதிகளுக்கமைய தற்போதைய நிலைமைகளை செயற்குழு ஆராய்ந்த பின்னரே பொதுவேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் சரத்பொன்சேகாவை வெற்றியடையச் செய்ய பாடுபடுமாறு அறிவுறுத்தத் தீர்மானிக்கப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில் நாட்டில் மக்களாட்சியை மலரச்செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி இன்று எடுத்திருக்கின்றது. ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வந்து மக்களாணையின் மூலம் மக்களரசாங்கத்தைத் தோற்றுவிப்பதற்கான ஆரம்பமே இது. இந்தத் தேர்தலை ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதித் தேர்தலாகப் பார்க்கவில்லை.அராஜக ஆட்சிஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சர்வஜன வாக்கெடுப்பாகவே இதனை நோக்குகின்றோம். இத்தேர்தலில்பொது வேட்பாளராக போட்டியிட முன்வந்திருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கியதேசியக்கட்சியும் ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மெதமுலன அதிகாரம் வீழ்த்தப்பட்டுவிடும் .


கட்சியாப்பின் 3.3(ஏ) பிரிவுக்கு அமையவே ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முடிவுசெய்யப்பட்டதாக கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி இன்று முதல் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவதை உறுதிசெய்யும் வகையில் கட்சி தேசிய,மாவட்ட தொகுதி பிரதேச கிளைகள் மட்டத்தில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் செயற்குழு கட்சித்தலைமைக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் பிரதித்தலைவர் கருஜயசூரியவுடன் இணைந்து செயற்படுமாறு கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.


முக்கியமானதொரு காலகட்டத்தில் பொருத்தமான முடிவையே கட்சி எடுத்துள்ளது. ஜனநாயகத்தைப்பாதுகாப்பதே கட்சியின் முதற்கடமையாகவுள்ளது. குடும்ப அதிகாரத்தை முடிவுக்குக்கொண்டுவரும் பாரிய பொறுப்பை நாம் ஜெனரல் பொன்சேகாவிடம் ஒப்படைத்துள்ளோம். ஜனநாயகத்தை மீட்டுத்தருவது அவரது கடப்பாடாகும். அதற்குப்பின்னர் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கான பாராளுமன்றத் தேர்தலை நடத்துவோம். அதில் வெற்றியீட்டிய பின்னர் நாம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு முக்கிய பிரச்சினை இருப்பதை அடையாளம் கண்டகட்சி ஐக்கியதேசியக்கட்சியே ஆகும். இன்று அதிகாரத்திலுள்ளவர்கள் தமிழருக்கு பிரச்சினைகள் இல்லை என்று சொன்னதை மறந்துவிடமுடியாது. இன்றும் கூட வடக்கில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதே உண்மையாகும். சட்டத்திற்கு முரணாகவே இவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


மக்களால் தெரிவு செய்யப்படாத பசில் ராஜபக்ஷவுக்கு மக்கள் பிரச்சினை எங்கே தெரியப்போகிறது.தமிழ் மக்களின் உரிமை பற்றிப் பேசிய எனக்கு அன்றுமுதல் சிங்கள இன விரோதி தேசத்துரோகி என்றெல்லாம் பழி சுமத்தி வருகின்றனர். தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், அனைவருக்கும் சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமை இருக்கவேண்டும். அதனைப்பெற்றுக்கொடுப்பதில் நான் என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன்.


தான் வெற்றியீட்டினால் தாமதமின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா எம்மிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், பதவியேற்று 48 மணி நேரத்துக்குள் அவசரகாலச்சட்டம் ரத்துச்செய்யப்படுமெனவும் உறுதியளித்தார்.அதேநேரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசின் கீழ் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் என்றும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
(தினக்குரல்)

நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வை எட்ட உடன்படுவோம்! டக்ளஸ்

- டக்ளஸ் தேவானந்தா-

"கடந்த கால அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்று சம்பந்தப்பட்ட தமிழ் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு உடன்பட்டு வரவேண்டும். இந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் மட்டுமே நான் சுவிஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன்." 


இவ்வாறு ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் ஊடகங்களுக்கான விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

"நடந்து முடிந்த சுவிஸ் மாநாடு தமிழ்ப் பேசும் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான ஓர் ஆரம்பம் மட்டுமே.

தமிழ் பேசும் கட்சிகளுக்கு மத்தியில் ஓர் ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் சுவிஸில் நடந்து முடிந்த மாநாடு, தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த மாநாட்டில் தீர்க்கமான முடிவுகள் எதையும் கூட்டாக எட்ட முடியவில்லை.

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள இவ்வாறான மாநாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்த நடைமுறை சாத்தியமான தீர்க்கமான முடிவுகளுக்கான முயற்சிகளை நோக்கிச் செல்லலாமென நான் நம்புகிறேன்.

இவ்வாறான மாநாடுகளின் நிகழ்ச்சி நிரல் என்பதை ஏற்பாட்டாளர்கள் தயாரிப்பதை விடுத்து, அதில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைமைகளே தயாரிக்க வேண்டும். பிறநாடுகளில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் ஏற்கனவே தோல்வி கண்டுள்ளன.


தடையற்ற சுதந்திர சூழ்நிலை


கடந்த காலங்களில் இது போன்ற முயற்சிகளுக்கு புலிகளின் தலைமை பிரதான தடையாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்போது அவ்வாறான தடைகள் இல்லாத சுதந்திரமான நிலை உருவாகி உள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் கடந்த காலங்களில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்ப் பேசும் அரசியல் தலைமைகள் பலவும் நடைமுறைக்குச் சாத்தியமான வழிமுறையினை ஏற்று செயற்பட்டிருக்கவில்லை.

எட்ட முடிந்த அரசியல் இலக்கு நோக்கி செல்வதற்கு கற்பனைக்கு எட்ட முடியாததும், வெறுமனே சலசலப்பு காட்டுவதற்கும் மட்டுமான வெறும் சுயலாபங்களுக்கான எதிர்ப்பு அரசியலையே நாம் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

இதன் காரணமாகவே எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயிருப்பதோடு எமது மக்களை இன்று அவலங்களுக்குள் சிறைப்பட்டிருக்கவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.

கடந்த கால அனுபவங்களைப் படிப்பினைகளாக ஏற்று சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு உடன்பட்டு வரவேண்டும்.


மக்கள் நலன்நாடி சிந்திப்போம்


இத்தகைய எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கையோடும் மட்டுமே நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தேன். இந்த மாநாட்டை ஓர் ஆரம்பத் தளமாகக் கொண்டு சக தமிழ்ப் பேசும் தலைமைகள் யாவும் எமது மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து நடை முறைக்கு சாத்தியமான விடயங்கள் குறித்து எதிர்வரும் மாநாடுகளில் தீர்க்கமான முடிவுகளுக்கு வர வேண்டும்.

இல்லாவிட்டால் எமது மக்கள் தொடர்ந்தும் அரசியல் உரிமைகள் அற்றவர்களாகவும், அவலங்களைச் சுமப்பவர்களாகவுமே இருப்பார்கள்.

வன்னியில் இருந்தும், அதி உயர் பாதுகாப்பு வலயங்களினாலும் வெளியேறிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட எமது மக்களை மீளக்குடியமர்த்துவது, அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை முன்னெடுத்தல், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டோ, அன்றி சரணடைந்த நிலையிலோ தடுத்து வைக்கபட்டிருக்கும் புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் புனர்வாழ்வு அளிப்பது- காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மையினை அறிய ஒரு சுதந்திரமான குழுவினை அமைத்தல் மற்றும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதில் இருந்து தொடங்கி சுயாட்சியை நோக்கிய இறுதி இலக்கை எட்டுவது போன்ற அரசியல் தீர்வு குறித்த விடயங்களையும் இலங்கை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அளப்பரிய அர்ப்பணங்களைக் கடந்த காலங்களிலும் நாம் ஆற்றியிருந்தோம்.

இன்றைய சமகால சூழலுக்கு ஏற்றவாறு சுயநிர்ணய உரிமை குறித்து தடைகள் இன்றி அரசியல் தீர்வு நோக்கி எம்மால் முன்னேற முடிந்திருக்கின்றது.


பயணத்தைத் தொடர்வோம்


மக்களின் மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி. அதற்காக நாம் நடைமுறை சார்ந்து நின்று, எடுத்த பயணத்தைத் தொடர்ந்தும் நடத்தியே முடிப்போம்.

சம்பந்தப்பட்ட தமிழ்ப் பேசும் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறைக்கு வருவதற்கான சந்தர்ப்பம் இன்னமும் இருக்கின்றது.

எமது மக்களின் மகிழ்ச்சி கருதி கடந்த காலங்களில் நாம் சந்தித்திருந்த கசப்பான அனுபவங்களை மறந்து, ஐக்கியத்திற்கான எமது கதவுகளைத் தொடர்ந்தும் திறந்து வைத்திருக்கின்றோம்." இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(வீரகேசரி இணையம்)

கனடாவில் சீமான் கைது!

கனடாவில் இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த இந்திய பட இயக்குனர் சீமான் கனடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் நிகழ்த்திய உரையில் பயங்கரவாதத்தை தூண்டும் கருத்துக்கள் காணப்பட்டதை தொடர்ந்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 



கைவிலங்கிட்டு கனடிய குடிவரவு குடியகல்வு தடுப்பு நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார் அவரை அங்கு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர் நாடுகடத்தப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

இதே வேளை கனடாவில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வில் இன்று இரவும் சீமான் உரையாற்ற இருந்தார் என்றும், நாளை நடைபெறும் நிகழ்விலும் உரையாற்ற இருந்தார் என்றும் கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கனேடிய அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் சீமான் ஆற்ற இருந்த உரையை தடுப்பதுவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதற்கான பிரதான காரணம் எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் பொன்சேகா மீது அரசாங்கம் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா 23 இராணுவ வாகனங்களையும் 110 இராணுவத்தினரையும் உத்தியகபூர்வமற்ற முறையில் பாவிக்கிறார் என்று இன்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தெரிவித்திருப்பதாவது.


66 இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி தனது வீட்டுக்கு நுழைபவர்களையல்லாமல் தான் தங்கியிருக்கும் கட்டிடத்துக்குள் நுழையும் பெண்களை பரிசோதிப்பதற்காக ஐந்து பெண் படை வீராங்கனைகள் கேட்டிருந்தார் அது அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.


குண்டு துளைக்காத ஒரு பி.எம்.டவ்லியு கார் மற்றும் இரண்டு இராணுவ லேன் ரோவர் ஜீப்கள் நான்கு இராணுவ சாரதிகளுடன் அவரது தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தேவையான துப்பாக்கிகள், சமிக்கைகள், தேவையான தொடர்புசாதன வசதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. என்று வீரதுங்கையின் கடிதம் கூறுகின்றது.


ஆனால் ஜெனரல் பொன்சேகா பத்து 9 எம்.எம் பிஸ்டோல்கள் காமாண்டர்களுக்காகவும், இன்னும் பத்து சிறிய Ushi/Hk MP5  ஆயுதங்கள், 72 டி-56 துப்பாக்கிகள் மற்றும் பத்து கையில் பாவிக்கக் கூடிய வோக்கி டோக்கிகளையும் தனது பாதுகாப்புக்காக கோரியிருந்தார்.
(கொழும்பு பக்கம்)

ஹம்பாந்தோட்டயில் சிறிய நில நடுக்கம்

ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹரம லுணுகம்பெர பகுதிகளில் மு ப 8.30 அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது .சேத விபரம் இதுவரை .இல்லை 

அயல்நாட்டு தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா உட்பட மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் தென்கொரியா நாட்டு தூதுவர்கள் நேற்று யாழ்குடாநாட்டிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், இவர்களின் இந்த திடீர் விஜயம் யாழ். மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. 

இரண்டு நாள் பயணமாக இங்கு வந்த இந்திய தூதுவர் அசோக் கே காந்தா, பலாலி விமான நிலையத்தில் இறங்கியதும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.அதன் பின்னர் அவர் யாழ் நகருக்குச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, இவர் யாழ் செயலகத்துக்கு சென்று அரசு அலுவலர்களுடன் சந்திப்பை முடித்துக்கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும், யாழ் மாநகரசபைக்கும் விஜயம் செய்தார். 

பின்னர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு சென்று துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ்குடாநாட்டில் உள்ள பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே யாழ்ப்பாணம் வந்த மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் தென்கொரிய நாட்டு தூதுவர்கள் முதலில் யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் பல அரசு அதிகாரிகளையும் சந்தித்தனர். 

இந்தியாவும், மலேசியாவும் ஏற்கனவே தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், இவர்களின் யாழ் விஜயம் பல துறைகளில் முதலீடு செய்வதற்கான ஆய்வு என்கின்றபோதும், அ திபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணங்கள் யாழ் மக்களிடம் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா?


ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையேறிய தேசத்துரோகிகளான மனோ கணேசன், ரவூப்ஹக்கீம் ஆகியோருடனும் தேசத்தைக் காட்டிக்கொடுத்த ரணில், மங்கள சமரவீரவுடனும் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வது இன்னொரு துரோகச் செயலுக்காகவா எனவும் கேட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடு ஈட்டிய யுத்த வெற்றியை ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முற்படுவதாகவும் விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு சுமத்தினார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது "விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் வெற்றியீட்டுவது உறுதிசெய்யப்பட்டதொன்றாகும். அவரது வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. பாரிய யுத்தத்தில் வெற்றியீட்டி நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி, அடுத்த நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து வறுமைக்கோட்டிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் இன்னுமொருதடவை ஜனநாயக வழியில் மக்களாணையை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முன்வந்துள்ளார். அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரின் கரங்களைப் பலப்படுத்த முன்வந்துள்ளன. இந்த நிலையில்தான் மக்களால் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து சதித்திட்டத்தில் இறங்கியுள்ளன.ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரியாவார். அவரால் ஜனநாயக ஆட்சியை மேற்கொள்ள முடியாது. இந்த நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் போன்றோர் புலிகளின் பொங்குதமிழ் நிகழ்வில் ஒரே மேடையில் ஏறியவர்கள். இவர்களுடன் ஜே.வி.பி. தலைவர்களும் ஜெனரல் பொன்சேகாவும் எப்படி ஒன்றாக இணைந்து செயற்படப்போகின்றனர்.
ஜே.வி.பி.தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்தவர்களில் ஒருவராக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் ஜே.வி.பி.யினர் ஒரே மேடையில் தோன்றி மக்கள்முன் செல்லப்போகின்றனர். இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன கிடையாதா எனக் கேட்கவிரும்புகின்றேன்
தினக்குரல்.

ஏ-9 வீதியூடாக செல்ல பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் அனுமதி

யாழ்.மாவட்டத்திலிருந்து ஏ-9 வீதியினூடாக கொழும்பு செல்லும் வாகனத் தொடரணி சேவையில் பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அரச அதிபர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், "யாழிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் பொருட்களைக் கொண்டு வர விரும்பும் பாரவூர்தி உரிமையாளர்கள் அவர்களுக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாகனத் தொடரணியில் இணைந்து கொள்ள முடியும்.

பாரவூர்தி உரிமையாளர்கள் தொடரணியில் இணைய விரும்பின், புறப்படும் தினம் காலை 6.30 மணிக்கு முன்னர் நாவற்குழி அரச களஞ்சியத்தில் பதிவினை மேற்கொள்ள வேண்டும். இதனைவிட யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்ல விரும்புகிறவர்கள் முதல் நாள் பொருட்களை நாவற்குழி களஞ்சியசாலைக்கு எடுத்துச் சென்று, பாதுகாப்பு அதிகாரிகளின் பரிசீலனையின் பின் மறுநாள் வாகனத் தொடரணியில் இணைய முடியும். 

தொடரணியில் இவ்வாறு இணையும் பாரவூர்திகள், பாரவூர்தியின் பதிவுப் புத்தகம், நடப்பாண்டு வரி அனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகனத் தகைமைச் சான்றிதழ் என்பவற்றின் மூலப்பிரதிகளை வைத்திருக்க வேண்டும். பாரவூர்தி சாரதி, உதவியாளர், கொள்வனவு உத்தியோகத்தர் போன்றோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
வீரகேசரி-இணையம்.

நடைமுறைகள் பின் பாரவூர்திகள் சீல் வைக்கப்பட்டு தொடரணியில் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அக்னி 2 இரவு சோதனை தோல்வி: டிஆர்டிஓ

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 1,500 கி.மீ. தூர தரை இலக்குகளைத் தாக்கவல்ல இந்தியாவின் இடைத் தூர ஏவுகணையான அக்னி 2, நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defense Research and Development organization - DRDO) தெரிவித்துள்ளது.

ஒரிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தின் கடற்பகுதியில் உள்ள வீலர் தீவிலிருந்து நேற்று இரவு 7.50 மணிக்கு அக்னி 2 ஏவுகணை செலுத்தப்பட்டது. தளத்திலிருந்து புறப்பாடும், பிறகு முதல் கட்டப் பிரிதலும் சரியாக நடந்ததென்றும், இரண்டாம் கட்டம் பிரிவதற்கு முன்னர் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து அக்னி ஏவுகணை தடம் மாறியது என்றும், இதனால் எதிர்பார்த்த முடிவுகளை அது தரவில்லை என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. 

அக்னி 2 ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, 1,500 கி.மீ. தூரத்திற்குட்பட்ட தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கியழிக்கவல்லதாகும். பல சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் அது இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்றுதான் முதல் முறையாக இரவுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பிற்கு 68 பேர் பொறுப்பு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அரசு

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதற்கு 68 பேர் பொறுப்பு என்று நடவடிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தகர்க்கப்பட்ட பாபர் மசூதி குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் அளித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“லிபரான் ஆணையத்தின் எந்தப் பரிந்துரையையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று வீரப்ப மொய்லி கூறினார்.

இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “ விசாரணை ஆணையம் பரிந்துரைகளையும் தாண்டி அரசு செல்லும்” என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.

“பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உண்மைகளை விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அவைகள் மீது ஒவ்வொரு அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில் தான் நடவடிக்கை தொடர்பான விவர அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய மொய்லி, “நடவடிக்கை அறிக்கையில் 68 பேர் பாபர் மசூதி இடிப்பிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பது குறித்தும் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது, இவைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்

அதிபர் தேர்தலில் போட்டி : இந்தியா ஆதரவைக் கோருகிறார் பொன்சேகா

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்ட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிற நிலையில், தமது எதிர்கால திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்நோக்குவதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு தாம் ' மிகவும் பிடித்தமான' நபர் என்றும், எனவே தமது எதிர்கால திட்டங்களுக்கு ( அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ) இந்தியாவின் ஆதரவை தாம் எதிர் நோகக்குவதாகவும் தெரிவித்தார். 

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் தாம் எப்போதும் செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்

பாதுகாப்பு குறைப்பு : பொன்சேகா நீதிமன்றத்தில் மனு

தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டது, மற்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருந்து தன்னை வெளியேற அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சரத்பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை, இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

நாட்டின் இராணுவத் தளபதியாக, பதவிக்காலம் முடிந்தும் ஜனாதிபதியால் அது நீடிக்கப்பட்டு, அதிபர் ராஜபக்சவின் நண்பராக உலா வந்த சரத் பொன்சேகா இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யுமளவிற்கு நிலை வந்துவிட்டது.

தமிழ் மக்கள் பலர் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பல தடவைகள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தபோதேல்லாம் எள்ளி நகையாடிய பல சிங்கள அரசியல் பிரமுகர்கள், இராணுவ மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் தற்போது அதே நிலை திரும்பியிருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

காரியம் ஆகியவுடன் கைகழுவி விடும் ராஜ பக்சவின் குணம் இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும்.தற்போது இருக்க இடமில்லாமல், பாதுகாப்பும் குறைக்கப்பட்ட சூழ் நிலையில் வெளியில் சென்றுவரவும் முடியாமல் சரத் அல்லாடுவதாக அறியப்படுகிறது.

எனவே சிறிது காலம் தாக்க்குப்பிடிக்க இவர் தற்போது அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துவிட்டு அதில் குளிர்காய எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது

தமிழ் பத்திரிகைகளுக்கு கொலை மிரட்டல்

யாழ்பாணத்திலிருந்து வெளிவருகின்ற யாழ் தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்ற இரு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். 

யாழ் மக்களை குழப்பும் விதத்தில் ' விடுதலைப் புலிகள் ' குறித்த செய்திகளை வெளியிடுவதாகவும், 2002 ஆம் ஆண்டு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் புகைப்படங்களை மீண்டும் பிரசுரிப்பதாகவும் மேற்படி பத்த்ரிகைகளுக்கு மிரட்டல் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டால் மேலும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் , "தொடர்ந்து நாங்கள் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்க மாட்டோம்" என்றும் அக்கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி அலுவலகத்திற்குள் நேரில் வந்த இருவரே இந்த மிரட்டலை விட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதன் 25 ஆம் தேதி யாழில் இருந்து வெளியான பத்திரிகைகளின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பின்னர் இந்த மிரட்டல் இப்போது விடுக்கப்பட்டுள்ளது. 

ஜூன் மாதம் மிரட்டல் விடுத்தவர்கள் தம்மை 'நாட்டைக் காக்கும் முன்னணி' என கூறியிருந்தனர்.ஆனால் நேற்று இரவு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதத்தில் 'தமிழர்களைக் காக்கும் முன்னணி" என்று குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் பத்திரிகைககள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்கள் ' விடுதலைப் புலிகளை' பாராட்டும்படியான ஒரு தோற்றத்தை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து வருவதாகவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

வடக்கு - கிழக்கை இணைக்க சம்மதமா ?

வடக்கு, கிழக்குப் பகுதிகளை இணைப்பதற்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியான தகவலை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். 

வடக்கு கிழக்கு இணைந்த தனியான அலகு என்பது விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகவே இருந்து வந்துள்ளதாகவும், எனினும் அதனை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் இலங்கை சென்றபோது, வடக்கு கிழக்கு இணைப்புக்கு ராஜபக்ச சம்மதம் தெரிவித்ததாக கூறப்படும் செய்தியை, இந்திய அரசுதான் வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட‌ல் ‌மீ‌ன்‌பிடி ஒழு‌ங்குமுறை ச‌ட்ட‌ம் கு‌றி‌‌த்து ‌விவாத‌ம்

மீ‌ன்‌பிடி ஒழு‌ங்கு முறை ச‌ட்ட‌த்தை கொ‌ண்டு வருவத‌ற்கு மு‌ன்பாக ம‌த்‌திய அரசு அனை‌த்து மா‌நில அரசுக‌ள், ச‌ம்ப‌ந்த‌‌ப்ப‌ட்டவ‌ர்க‌‌ளி‌ன் கரு‌த்து‌க்களை அ‌‌றி‌‌ந்து‌ ‌‌வி‌‌ரிவான ‌விவாத‌ம் நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய ‌விவசாய‌த்துறை அமை‌ச்ச‌ர் சர‌த்பவாரு‌க்கு எ‌ழு‌திய கடித‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அ‌ந்த கடித‌த்த‌ி‌ல், ‌மீ‌ன்‌பிடி ஒழு‌ங்கு முறை பு‌திய ச‌ட்ட மு‌‌ன்வடிவா‌ல் ‌மீனவ‌ர்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புகளை ப‌ட்டிய‌லி‌‌ட்டு‌ள்ளா‌ர். இ‌ந்த ச‌ட்ட‌ மு‌ன்வடி‌‌வி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள க‌ட்டு‌ப்பாடுகளை ‌மீ‌றினா‌ல் உ‌ரிம‌‌ம் ர‌த்து, அபராத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட த‌ண்டனைகளு‌க்கு ‌மீனவ‌ர்க‌ள் ஆ‌ட்படுவா‌ர்க‌ள் எ‌ன்பதை அவ‌ர் அ‌ந்த கடித‌த்‌தி‌ல் சு‌ட்டி‌க்கா‌ட்டி த‌ன்னுடைய கவலையை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

எனவே, இது தொட‌ர்பாக மா‌நில அரசுக‌ள் ம‌ற்று‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட அனைவ‌ரி‌ன் கரு‌த்து‌க்களையு‌ம், ஆலோசனைகளையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ச‌ட்ட மு‌ன்வடிவை இறு‌தி செ‌ய்து நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்வத‌ற்கு மு‌ன்பாக ‌வி‌ரிவான ‌விவாத‌ம் நட‌த்த‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌விடய‌த்த‌ி‌ல் தா‌ங்க‌ள் உடனடியாக தலை‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் சர‌த்பவாரை கருணாந‌ி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்