இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்ட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிற நிலையில், தமது எதிர்கால திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்நோக்குவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு தாம் ' மிகவும் பிடித்தமான' நபர் என்றும், எனவே தமது எதிர்கால திட்டங்களுக்கு ( அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ) இந்தியாவின் ஆதரவை தாம் எதிர் நோகக்குவதாகவும் தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் தாம் எப்போதும் செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்
No Response to "அதிபர் தேர்தலில் போட்டி : இந்தியா ஆதரவைக் கோருகிறார் பொன்சேகா"
Post a Comment