மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அறிந்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில், மீன்பிடி ஒழுங்கு முறை புதிய சட்ட முன்வடிவால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளார். இந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் உரிமம் ரத்து, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளுக்கு மீனவர்கள் ஆட்படுவார்கள் என்பதை அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி தன்னுடைய கவலையை வெளியிட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்ட முன்வடிவை இறுதி செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் சரத்பவாரை கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்
No Response to "கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் குறித்து விவாதம்"
Post a Comment