இறுதிக் கட்ட போரின்போது வன்னியிலுள்ள தமிழ் மக்களைகளை கொன்றுகுவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்
இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதி என அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ள நிலையில் சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆனால் அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்ககை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.
இச்செய்தியாளர் தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் பொன்சேகா அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு,வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.
No Response to "தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் - சரத் பொன்சேகா"
Post a Comment