இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வு: இந்தியாவிடம் கையளிப்பு?

மீண்டும் தமது ஆட்சி நீடிக்குமானால் அதிபர் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு, இந்தியாவிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மஹிந்த சகோதரர்கள் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர்தான் இந்த அதிகாரப் பகிர்வு திட்ட ஆவணத்தை இந்திய அரசிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
ஆனால் இதிலுள்ள விடயங்கள் வெளியே தெரிந்தால் நடைபெற உள்ள தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என ராஜபக்ச் கருதவதால், இது பற்றிய தகவலை இப்போதைக்கு வெளியிடுவதில்லை என இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டதாக அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றன. 

எனவே, மேற்படி குழுவின் இந்திய பயண அறிக்கையை வெளியிடும்போது, "இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் ஒப்புக் கொண்டன" என்று மட்டும் சூசகமாக வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

No Response to "இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வு: இந்தியாவிடம் கையளிப்பு?"

Post a Comment