தெற்கு வசீரிஸ்தான் கட்டுப்பாட்டில் வந்தது - பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டநடவடிக்கை முடிவு‌க்கு வந்துள்ளதாகவும், தெ‌ற்கு வசீரிஸ்தான் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியது. இதில் 30 ஆயிரம் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கையில் 589 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 79 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 



மேலும், தெற்கு வசீரிஸ்தானில் பதுங்கியிருந்த தா‌லிபா‌ன் தீவிரவாதிகள் வடக்கு வசீரிஸ்தானுக்கும், குர்ரம் பகுதிகளுக்கும் தப்பி ஓடிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது

No Response to "தெற்கு வசீரிஸ்தான் கட்டுப்பாட்டில் வந்தது - பாகிஸ்தான் ராணுவம்"

Post a Comment