காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முயற்சி தோல்வி

காமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாட்டை வருகிற 2011 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.அம்மாநாட்டை ஆஸ்ட்ரேலியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ட்ரினாட் அன்ட் டுபாக்கோவில் நடைபெற்ற காமன்வெல் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

2011 ஆம் வருட மாநாட்டை இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்ட போதிலும், மனித் உரிமைகளை மதிக்காத அந்நாட்டில் இம்மாநாட்டை நடத்த பிரிட்டன், கன்டா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சி பலனளிக்காமல் போனது.

இதனால் அடுத்து 2013 ஆம் வருட மாநாடு இலங்கையில் நடைபெறலாமென நம்பப்படுகிறது. 

காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் அரசு தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தும் உச்சி மாநாட்டில் காமன்வெல்த் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆராயப்படுவது வழக்கம்.

ஆஸ்ட்ரேலியா, காமன்வெல்த் உச்சி மகாநாட்டை இதற்கு முன்னர் இரு தடவைகள் நடத்தியுள்ளது.கடைசியாக 2002 ஆம் ஆண்டில் குயூன்ஸ்லடன் நகரிலுள்ள கூலம் என்ற இடத்தில் அந்நாடு இந்த மகாநாட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக 2011 இல் நடக்கவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புவது என்ற காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் நோக்கங்கள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு நாட்டிலேயே இம்மாநாடு நடக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியிருந்தார்.அதேபோன்று கனடா அரசாங்கமும் இலங்கையில் இம்மாநாட்டை நடக்க தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. 

காஅன்வெல்த் நாடுகளின் அங்கத்தினராக இருந்த பிஜி, பாகிஸ்தான், நைஜீரியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசாங்கம், ராணுவத்தினர் மூலம் கட்டவிழ்த்துவிட்ட மனித உரிமை மீறல்கள், வன்முறைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

No Response to "காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முயற்சி தோல்வி"

Post a Comment