வருகிற ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலை சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள் என்று இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பில் மிக வலுவான வேட்பாளராக முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா களமிறங்கியுள்ளார்.
இதனால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்றும், தேர்தலில் வெற்றிபெற ராஜபக்ச தரப்பு முறைகேடுகளிலும், அராஜகங்களிலும் ஈடுபடலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று பொன்சேகா தரப்பும் பதிலடிக்கு தயாராகவே உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் அதிபர் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தாம் உறுதிபூண்டுள்ளதாகவும், தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன், காமன்வெல்த் நாடுகள் மற்றும் ஐ.நா. வைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் கொழும்பு வரவுள்ளதாகவும் திசநாயகே இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No Response to "இலங்கை அதிபர் தேர்தலை சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்"
Post a Comment