ஈரான் மேலும் புதிய 10 யுரேனிய செறிவூட்டல் நிலையங்களை அமைக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச அணு நெறிமுறைகளை கடைபிடிக்க ஈரானுக்கு விதிக்கப்பட்ட்ட கால வரையறை முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.
" ஈரான் புதிதாக 10 யுரேனிய செறிவூட்டல் உலைகளை அமைக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மை எனில் அது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை மீறிய கடுமையான குற்றமாகவும், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள ஈரான் தேர்ந்தெடுத்த மற்றொரு உதாரணமாகவும் கருதப்படும்.
யுரேனிய செறிவூட்டல் உலைகளை அமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உள்ளதாக சர்வதேச சமுதாயம் தெளிவாக கூறியுள்ளது.அதே சமயம் அந்த உரிமைகளுக்கென்று சில பொறுப்புகள் உள்ளன " என்று அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
No Response to "காலக்கெடு முடிந்து விட்டது ; ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை"
Post a Comment