ஐ ஏ இ ஏ தீர்மானம் காட்டுமிராண்டித்தனமானது : ஈரான்

ஈரானுக்கு எதிராக சர்வதேச அணு சக்தி முகமை - யான ஐஏஇஏ நிறைவேற்றியுள்ள தீர்மானம் காட்டுமிராண்டித்தனமானது என்று அந்நாடு கூறியுள்ளது. 

ஈரான் தனது இரண்டாவது யுரேனிய செறிவூட்டல் உலையை புனித நகரமான குவாமில் உள்ள மலையில் அமைத்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும், அதனை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐஏஇஏ தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. 

இந்நிலையில் தெஹ்ரானில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அயலுறவுத் துறை அமைச்சர் மானுச்செக்கர் மோட்டாக்கி, ஈரானுக்கு எதிரான இத்தீர்மானம் நியாயமானதாக இல்லை என்று கூறினார். 

இது ஈரானை அவமதிக்கும் செயல் ; இந்த தீர்மானத்தை காட்டுமிராண்டித்தனமான சட்டம் என்றுதான் நாங்கள் கூற முடியும்.

தனது அணு தொழில்நுட்பத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நியாயமான உரிமையை ஈரான் ஒருபோதும் கைவிடாது " என்று அவர் மேலும் தெரிவித்தார்

No Response to "ஐ ஏ இ ஏ தீர்மானம் காட்டுமிராண்டித்தனமானது : ஈரான்"

Post a Comment