பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு.


பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கிழக்குப்புற கடற்கரையில் வைத்து தத்தளித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கைச் சேர்ந்த 'சேனக 8' என்ற மீன்பிடிக்கப்பலினால் அவதானிக்கப்பட்டு கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கடற்படையினரின் விசேட மீட்புப் படகுகளின் மூலம் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வைத்திய உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு திருகோணமலை கடற்படைத்தளத்தில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

No Response to "பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு"

Post a Comment