ஒரிசா மாநிலம் சென்ற குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பூரியில் இருந்து புவனேஸ்வரம் விமான நிலையத்திற்கு திரும்பிய போது, ஹெலிகாப்டரின் மேற்புறம் உள்ள சுழல் காற்றாடி (Fan blades) கட்டிட கூரையில் மோதியது. என்றாலும் பிரதீபா பாட்டீல் உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அவரது கணவர், ஒரிசா ஆளுநர் ஆகிய 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பூரி சென்று விட்டு ஹெலிகாப்டரில் பிரதீபா பாட்டீல், அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத், ஆளுநர் எம்.சி. பண்டாரி ஆகியோர் புவனேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஹெலிகாப்டரின் காற்றாடியின் 3 பிளேடுகளும் விமான நிலையத்தின் சிமெண்ட் ஷெட் கூரையின் மீது மோதியது.
இதில் கூரை இடிந்ததுடன், பிளேடுகளும் உடைந்தன.
என்றாலும் பிரதீபா பாட்டீல் உட்பட யாரும் காயமின்றி உயிர் தப்பினர்.
No Response to "ஹெலிகாப்டர் விபத்து: பிரதீபா பாட்டீல் உயிர் தப்பினார்"
Post a Comment