நேபாளம்: தலைநகரை கைப்பற்றினர் மாவோயிஸ்டுகள்

நேபாள தலைநகர் காத்மாண்டுவை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள மாவோயிஸ்டுகள், அதனை சுயாட்சி பிராந்தியம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

நேபாளத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஏற்கனவே நிழல் அரசுகளை அமைத்துவிட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்த நிலையில், தற்போது தலைநகர் காத்மாண்டுவையும் கைப்பற்றி அதனை புதிய சுயாட்சி கொண்ட பிராந்தியமாக ஆக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.

இடம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரிட்டன்

இலங்கையில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டனின் அயலுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனைத்து மனிதாபிமான அமைப்புகளும் சென்று வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

ஜனாதிபதி மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார் யுத்த விடயங்கள் உட்பட என்கிறார் ஜெனரல்


யுத்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி தொலைக் காட்சி விவாதமொன்றுக்குத் தான் தயாராக இருப்பதாக எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி.ஆகியவற்றின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஜெய்க்ஹில்டனில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமர சிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் எதிரணிகள் மீது சேறு பூசும் கலாசாரத்தைக் கைவிட்டு உண்மையை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.

சரணடைந்த புலிகளை கொல்லுமாறு கோதாபய ஒருபோதும் உத்தரவிடவில்லைஅரசு உறுதியாக நிராகரிப்பு ஜெனரலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை


சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொல்லுமாறு அரசாங்கமோ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவோ ஒருபோதும் உத்தரவிட்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாக நிராகரித்துள்ள அரசு எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா இது தொடர்பாகத் தெரிவித்திருந்தமைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.
வடக்கில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், நடேசன்,ரமேஷ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை துரோகத் தனமானதெனக் கூறி முற்றாக மறுத்திருக்கும் அரசாங்கம், இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்

அணு ஆயுதங்களை குறைக்க யு.எஸ்., ரஷ்யாவுக்கு கோரிக்கை

அமெரிக்காவும், ரஷ்யாவும் தாங்கள் இருப்பு வைத்துள்ள அணு ஆயுதங்களில் தலா 500 எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ஆஸ்ட்ரேலியாவும், ஜப்பானும் கோரிக்கை விடுத்துள்ளன. 

மேலும் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள அணு ஆயுதங்களில் 90 விழுக்காட்டை குறைக்க வேண்டும் என்றும் அவ்விரு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. 

அணு ஆயுத ஒழிப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பாக ஆஸ்ட்ரேலியா - ஜப்பான் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சுமார் 22,000 முதல் 23,000 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளதாகவும், இவற்றில் தலா 500 அணு ஆயுதங்களையாவது இரு நாடுகளும் குறைக்க வேண்டும் என அதில் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன. 

மேலும் இந்தியா உள்பட அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இதர நாடுகளும் தங்களது அணு ஆயுத எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அணு ஆயுதங்களை தொடர்ந்து வைத்திருப்பதினால் ஏற்படும் பலன்களை விட ஆபத்துக்களே அதிகம் உள்ளதால், அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்திடும் தீவிர முயற்சியாகவே இந்த முக்கியமான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் கேரத் ஏவன்ஸ் கூறினார்

இல‌ங்கை அதிபர் தேர்தல் : சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டி!

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிடுகிறார். 

அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வைப்புப் பணத்தை தேர்தல் செயலகத்தில் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புலி அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைய வந்ததை உறுதிப்படுத்துகிறது ஐ.நா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்ததை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜோன் ஹோமஸ், சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே இதனை உறுதிபடுத்தியுள்ளார். 

விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவதற்கு விரும்புவதாக ஐ.நா. சபைக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், அது குறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜோன் ஹோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் பாதுகாப்பான முறையில் சரணடைவதை தம்மால் உறுதிப்படுத்த முடியாமல்போனதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் ஐ.நா. அதிகாரிகள் யுத்த பிரதேசத்தில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சரணடைய விரும்பியவர்கள் பின்னர் உயிரிழந்து விட்டதாக ஊடகங்கள் மூலமாகத்தான் தாம் அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அவர்கள் எவ்வாறு கொல்லப்பாட்டர்கள் என்பது குறித்தோ அவர்களை யார் படுகொலை செய்தார்கள்; எவ்வாறு அந்த சம்வம் இடம்பெற்றது என்பது குறித்தோ ஐ.நா. சபைக்கு தெரியாது என்றும் ஜோன் ஹோமஸ் தெரிவித்துள்ளார்

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோக் காட்சிகள் உண்மையே

இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல என்று 'டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது. 

முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்ட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்றும், இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மாற்றுக் கருத்துகள் இன்றி நிஜமாகவே இடம்பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

'டைம்ஸ்' ஏட்டின் இந்த உறுதிப்படுத்துதலானது, இலங்கை அரசின் மீதான யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கான சர்வதேச குரலை மேலும் வலுப்படுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இந்தியாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே பொன்சேகா பதவி நீக்கம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே, இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை, அந்தப் பதவியிலிருந்து அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் 'நேசன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாதக சூழ்நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன்மோகன் சிங்,ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையிலேயே பொன்சேகா பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொன்சேகா, இலங்கை இராணுவத்தினர் மத்தியில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்ததாகவும், இந்த நிலையானது இலங்கையில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி விடும் என்று கொழும்பில் உள்ள 'ரா' அதிகாரிகள் மூலம் இந்திய பிரதமருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்தே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்று மன்மோகன் சிங், ராஜபக்சவை எச்சரித்துள்ளார்.

மேலும் இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளை உடனடியாக இடமாற்றுமாறும், அதிகளவு பலம் பொருந்தியவராக மாறியுள்ள பொன்சோகவிற்கு அதிகாரங்கள் அற்ற பதவி ஒன்றை வழங்குமாறும் மன்மோகன் சிங், அப்போது ஆலோசனை வழங்கியுள்ளார். 

அத்துடன் யுத்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரது உத்தரவுகள் பலவற்றை நிறைவேற்ற பொன்சேகா தவறியதாகவும், அந்த உத்தரவுகள் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகளால்தான் யுத்த களத்தில் இந்தியா விரும்பிய சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெறாமல் போய்விட்டதாகவும், அதனால் பொன்சேகா மீது இந்தியாவிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை நோக்கி வந்த விமானம் தாய்லாந்தில் பறிமுதல் : அமெரிக்கா ஆய்வு

ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. 

தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு வசீரிஸ்தான் கட்டுப்பாட்டில் வந்தது - பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டநடவடிக்கை முடிவு‌க்கு வந்துள்ளதாகவும், தெ‌ற்கு வசீரிஸ்தான் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியது. இதில் 30 ஆயிரம் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதிய ஆட்சி மலர்ந்தால் தமிழர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம்: ரனில் விக்கிரமசிங்கே

''இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்தால் தமிழர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம;'' என்று மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரனில் விக்கிரமசிங்கே கூறினார்.

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே நேற்று மாலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வ‌ந்த‌ா‌ர். ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ள்,டெல்லி செல்லும் நீங்கள் யாரை சந்திக்க உள்ளீர்கள் எ‌ன்று கே‌ட்டன‌ர்

மனநலம் குன்றியவர் தாக்கியதில் இத்தாலிய பிரதமரின் பல் உடைந்தது

இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது. 

இத்தாலியில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மண்டல தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், விடுதலை மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் பெர்லுஸ்கோனி நேற்று மாலை பங்கேற்றார். 

இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வு: இந்தியாவிடம் கையளிப்பு?

மீண்டும் தமது ஆட்சி நீடிக்குமானால் அதிபர் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு, இந்தியாவிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மஹிந்த சகோதரர்கள் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர்தான் இந்த அதிகாரப் பகிர்வு திட்ட ஆவணத்தை இந்திய அரசிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சிறார் போராளிகள் குடும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டும்: ஐநா வலியுறுத்தல்

இலங்கையில் தனி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. 

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும் என சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் கூறியுள்ளார்.

இவ்வாறான சிறுவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழும்போதுதான் உளவியல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவார்கள் என்பது உலகில் மோதல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தொடர்பில் கண்டறியப்பட்ட உண்மை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பாக்.கில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களுக்கு அல்- காய்தாவினருடன் தொடர்பு

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்கள் ஐந்து பேருக்கு அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இஸ்லாமாபாத்திலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சர்கோதா என்ற இடத்தில் இரண்டு பாகிஸ்தானிய அமெரிக்கர்கள் உள்ளிட்ட 5 அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். 

நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் குறித்த முதலாவது வரைவறிக்கை தயார்: உருத்ரகுமாரன் அறிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவது தொடர்பான தனது அறிக்கையின் முதலாவது வரைவை, நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு நிறைவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் அமைப்பாளர் உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

"நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான உருவாக்கக்குழுவுக்கான மதியுரைக்குழு டிசம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரையிலான தேதிகளில் தனது சந்திப்பினை லண்டன் நகரில் மேற்கொண்டது. 

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைவை இச் சந்திப்பில் மதியுரைக்குழு நிறைவு செய்தது. 

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலிருந்து முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு கேள்விகள், கருத்துக்கள், ஆலோசனைகள் இவ் வரைகில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 

அடித்தளமாக அமைய வேண்டிய வழிகாட்டிக் கோட்பாடுகள், அறிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து தேர்தல்கள் நடைபெற்று நாடு கடந்த தமிழீழ அரசு அமையும் நாள் வரையிலான காலப்பகுதியில் மதியுரைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அறிஞர் குழாம் ஒன்று ஒழுங்கமைக்கப்படல் ஆகியன உள்ளடங்கியிருந்தன. 

மதியுரைக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான பிரிட்டான் செயற்பாட்டுக்குழுவினருடனும் சந்திப்பினை மேற்கொண்டு செயற்திட்டத்தை முன்நோக்கி நகர்த்துவது தொடர்பாகக் கருத்துப்பரிமாற்றங்களையும் நிகழ்த்தியது. 

மேலும், லண்டன் நகரில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பினை மேற்கொள்ளும் வாய்ப்பும் மதியுரைக்குழுவுக்குக் கிடைத்தது. 

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மனிதாபிபான நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்ட மதியுரைக்குழு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது பெற்றோரைப் பிரிந்து தடுப்பு முகாம்களில் வாடும் பிள்ளைகளை பெற்றோரோடு ஒன்று சேர்ப்பது, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துலக பாதுபாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றிற்கான வழிவகைகளை ஆழ்ந்து ஆராய்ந்தது. 

இவ்வாறு தடுப்பு முகாம்களில் வாடும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளின் தகவல்களை மதியுரைக்குழு தொடர்ச்சியாகச் சேகரித்து ஆவணப்படுத்தி வருகிறது. 

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுடன் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தங்கு தடையில்லாத தொடர்பைப் பேணிப் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்குமாறு அனைத்துலக சமூகத்தினை மதியுரைக்குழு இச் சந்தர்ப்பத்தில் கோருகிறது. 

இம் மக்கள் மீளக்குடியமரும் போது அவர்களது பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்கள் குறித்தும் அவர்களின அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாது பாதுகாக்கப்படுவது உட்பட ஏனைய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது குறித்தும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கண்காணிப்பு செய்ய அனுமதிக்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும். 

மக்கள் தடுப்பு முகாம்களிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதனையும், இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்கள் புதிய இடங்களில் விசாரணை, மீள் கைது போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கக்கூடிய உத்தரவாதங்கள் வழங்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மதியுரைக்குழு கோருகிறது" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான முயற்சியில் தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதில் மதியுரைக்குழு தனது முழுமையானபற்றுறுதியை வெளிப்படுத்துகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை தொடர்பான வேலைகள் வகுக்கப்பட்டு இந்த திட்டத்திற்கு அமைவாக முன்னேறி வருவதனையும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இவ் அறிக்கை மக்கள் முன் வைக்கப்படும் என்பதனையும் மதியுரைக்குழு மகிழ்வுடன் அறியத் தருகிறது" என்று அந்த அறிக்கையில் அவர் 

நானும் எல்லை மீறுவேன்: ராஜபக்ச ஆவேசம்

எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க இனியும் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்ப உறுப்பினர்களைப் பற்றியோ களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசிவந்தால், தாமும் எல்லை மீறி பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இலங்கை அதிபர் ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார். 





ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த சனிக்கிழமையன்று வெலிசரையில் நடைபெற்ற போது அதில் பேசிய ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சவின் குடும்ப அரசியலில் உள்ள ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்தார்.






இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்ச, மலிக் சமரவிக்ரமவை தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்கண்ட எச்சரிக்கையை ரனிலிடம் தெரிவிக்குமாறு மிரட்டியுள்ளார்.






எஸ்.பி.யை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தாம் எண்ணியிருக்காத போதிலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலடி கொடுப்பதற்காக எஸ்.பி.யை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்பின்னல் ரணில் விக்ரமசிங்க எல்லைமீறி செயற்படுவாராயின், தானும் எல்லைமீறி செயற்பட நேரிடும் என ராஜபக்ச அப்போது மேலும் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து: பிரதீபா பாட்டீல் உயிர் தப்பினார்

ஒரிசா மாநிலம் சென்ற குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பூரியில் இருந்து புவனேஸ்வரம் விமான நிலையத்திற்கு திரும்பிய போது, ஹெலிகாப்டரின் மேற்புறம் உள்ள சுழல் காற்றாடி (Fan blades) கட்டிட கூரையில் மோதியது. என்றாலும் பிரதீபா பாட்டீல் உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அவரது கணவர், ஒரிசா ஆளுநர் ஆகிய 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

பூரி சென்று விட்டு ஹெலிகாப்டரில் பிரதீபா பாட்டீல், அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத், ஆளுநர் எம்.சி. பண்டாரி ஆகியோர் புவனேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஹெலிகாப்டரின் காற்றாடியின் 3 பிளேடுகளும் விமான நிலையத்தின் சிமெண்ட் ஷெட் கூரையின் மீது மோதியது.

இதில் கூரை இடிந்ததுடன், பிளேடுகளும் உடைந்தன.

என்றாலும் பிரதீபா பாட்டீல் உட்பட யாரும் காயமின்றி உயிர் தப்பினர்.

ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்புகிறது தென் கொரியா

ஆப்கானிஸ்தானுக்கு தென் கொரியா படையினர் 350 பேர் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தென் கொரியாவிலிருந்து 100 தொழிலாளர்களும், 140 காவலர்களும் அனுப்பப்பட உள்ளனர். 

அத்துடன் தாலிபான் தீவிரவாதிகளிடமிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக, தென் கொரியா படையினர் 350 பேரும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் ஆப்கான் செல்லும் இந்த தென் கொரிய படையினர், அமெரிக்க படைகளுடன் இணைந்து தாலிபான்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாக்தாத்: குண்டுவெடிப்பில் 101 பேர் பலி; 105 காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 101 பேர் பலியாகினர்; 105 பேர் காயமடைந்தனர். 

பாக்தாத்தின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பினால் அந்த இடமே அதிர்ந்ததாகவும், அடர்த்தியான கரும்புகை வானை நோக்கி எழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும், அவசர உதவி வாகனங்கள் விரைந்து செல்லும் சப்தமும் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாக்தாத்தின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு செல்லுபடியற்றதாகும் -தேர்தல்கள் திணைக்களம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணாக, தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் உள்ளிட்ட அரச மற்றும் மாகாண நிறுவனங்களில் ஆட்சேர்ப்புக்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகள் இடம்பெறுவதாகத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவையாவும் செல்லுபடியற்றதாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. இவை தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச்சட்டத்தின் 104ஆ(4),104(ஒ) ஆகிய உறுப்புரைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகளின் தலைவர்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.

இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் அரச, கூட்டுத்தாபனம், நியதிச்சபை நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், பதவியுயர்வு என்பன தேர்தல் காலங்களில் நிறுத்தி வைக்கப்படுவது அவசியமாகும். தேர்தல் காலமென்பது பிரகடனம் வெளியிடப்பட்ட திகதிக்கும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தினத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும். 

ஜனாதிபதி தேர்தலை பொறுத்து இக்காலப்பகுதியானது 23.11.2009 தொடக்கம் முடிவுகள் அறிவிக்கப்படும் தினம் வரை ஆனதாகும் மேற்குறிப்பிட்ட திகதியிலோ அல்லது அதற்கு பின்னர் இடம்பெறும் நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் செல்லுபடியற்றதாக்கப்படும்

மட்டக்களப்பில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல்(H1 N1) வைரஸ் நோயினால் பீடிக்கபட்ட முதலாவது நோயாளர் இனம் காணப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டானைச் சேர்ந்த கே.பாக்கிராஜா (வயது 45) என்ற குறித்த நோயாளி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளுடன் கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது இரத்த மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை தொலைபேசி ஊடாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் இந்நபருக்கு பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் ஊழியர்களிடையே பரபரப்பான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்.

முகக் கவசம் அணிந்து ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள போதிலும் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முகக் கவசம் போதுமானதாக இல்லை என்பதால் வைத்தியசாலை நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீ பால டீ சில்வாவினால் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோய்களுக்கான தனியான வார்ட் பிரிவு தொடர்ந்தும் இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

20 படுக்கைகளுடன் கூடிய குறித்த வார்ட்டை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஊழியர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

கடந்த வாரம் திருகோணமலையில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவ சிப்பாயொருவர் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(வீரகேசரி இணையத்தளம்)

ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் குடா நாட்டிட்கு செல்ல ஏற்பாடு

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரேம சிங்க அவர்களும் யாழ்பாணம் விஜயம் செய்யவுள்ளனர்


ஜனாதிபதி எதிர்வரும் 09 திகதி யாழ்பாணம் செல்லவுள்ளதுடன் அவர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதே வேலை எதிர்கட்சித் தலைவர் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்குடாநாட்டிக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ் விஜயத்தின்போது அவர் யாழ்பாண ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாகிகள் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளார்.


ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரேமசிங்கவும் குடா நாட்டிட்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிதக்கதாகும்.
(விரகேசரி)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதனை தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பின்லேடனுக்கு எதிராக அமெரிக்க மீண்டும் தேடுதல் வேட்டை

சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடன் ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒளிந்திருப்பதாக நம்பும் அமெரிக்கா, பின்லேடனுக்கு எதிராக புதிய தேடுதல் வேட்டையை தொடர திட்டமிடுள்ளது. 

பின்லேடன் சில நேரங்களில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ள வடக்கு வாசிரிஸ்தானிலும், சில சமயம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியிலும் நடமாடுவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். 

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவரிடம், அப்படியென்றால் பின்லேடனுக்கு எதிராக அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் மீண்டும் ஒரு புதிய தேடுதல் வேட்டையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதா எனக்கேட்டபோது, அப்படித்தான் தாம் கருதுவதாக பதிலளித்தார்

கோபன்ஹேகன் மாநாடு ஒப்பந்தம்: ஜி-77 நாடுகள் கவலை

பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற உள்ள மாநாட்டில் நிறைவேற்றுவதற்காக, மிக அதிகமான ஒப்பந்த வரைவுகள் இடம்பெற்றுள்ளது குறித்து வளரும் நாடுகளின் அமைப்பான ஜி-77 கவலை தெரிவித்துள்ளது. 

மாநாடு இன்று தொடங்க உள்ளதையொட்டி சீனா மற்றும் வளரும் நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த இரு நாட்களாக மாநாட்டு அறையில் கூடி, மாநாட்டிற்கான தங்களது திட்டங்கள் மற்றும் மாநாட்டின் இறுதியில் எத்தகைய முடிவுகள் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது குறித்தும், குறிப்பிட்ட பிரச்னைகளில் தங்களது நிலைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் விவாதித்தனர். 

அப்போது மாநாட்டில் நிறைவேற்றுவதற்காக, மிக அதிகமான ஒப்பந்த வரைவுகள் இடம்பெற்றுள்ளது குறித்து ஜி-77 நாடுகளின் பிரதிநிதிகள், தங்களது கவலையை தெரிவித்ததாக இந்திய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்

ஐ.நா பிரதிநிதி இன்று இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும், ஆயுத வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பற்றிக் கமேயற் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இன்று இலங்கை வரும் இவர் , எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே அவர் இலங்கை செல்கிறார். 

இந்நிலையில் இலங்கை நிலவரம் தொடர்பான, அறிக்கையை அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

அவர் இலங்கையில், இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதுடன், அரசாங்க அதிகாரிகளையும், தன்னார்வு நிறுவன அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் பற்றிக் கமேயற், நெதர்லாந்து கடற்படையில் பணியாற்றிய அதேநேரம், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்

மன்னார்-மதவாச்சி சோதனைச்சாவடியூடான போக்குவரத்து சேவை ஆரம்பம்

மன்னாரில் இருந்து மதவாச்சி சோதனைச்சாவடியூடாக தென் பகுதிக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் தற்போது தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றது.

இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் மன்னாரிலிருந்து மதவாச்சி சோதனைச்சாவடியூடாக தனியார் பயணிகள் பஸ் ஒன்று தெர்கிற்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்தார்.

சுமார் இரண்டு வருடத்துக்குப் பின் மன்னாரிலிருந்து மதவாச்சியூடாக தென்பகுதிக்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஸ்ரீ.சு.கட்சியில் இணைகிறார் எஸ்.பி

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் மத்திய அக்கட்சியின் மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி;. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதாகவுமு; ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்துவந்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்த கருத்துகளை இதுவரை வெளியிடாமல் இருந்த திசாநாயக்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
(வீரகேசரி)

மலையத்தில் புதிய தொழிற்சங்கம் உதயம்

ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வழிகாட்டலின்பேரில் ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவில் இதன் ஆரம்ப வைபவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி எஸ். கிருஸ்ணகுமார் இத் தொழிற்சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமைக் காரியாலயம் மாத்தளையில் திறந்துவைக்கப்பட்டு இயங்கிவருவதாக தொழிற்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நியாயமான முறையில் போராடப்போவதாகவும் சந்தாவை நோக்கமாகக் கொள்ளாமல் தொழிலாளர்களின் நலனுக்காக எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்
(வீரகேசரி) 

அமெரிக்க வாழ் இந்தியருக்கு சர்வதேச மதநல்லிணக்க விருது

அமெரிக்க வாழ் இந்தியரான இபு பட்டேலுக்கு 2010ஆம் ஆண்டுக்கான லூயிஸ்வில்லி கிராவிமேயர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 வயதாகும் இபு பட்டேலுக்கு விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும்.

இசை அரசியல் விஞ்ஞானம் மனோதத்துவம்கல்விமதநல்லிணக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு லூயிஸ்வில்லி கிராவிமேயர் (Louisville Grawemeyer) சர்வதேச விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2010ஆம் ஆண்டுக்கான மதநல்லிணக்க விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இபு பட்டேல் தேர்வாகி உள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி எழுதிய ‘ஆக்ட்ஸ் ஆஃப் ஃபெய்த் (Acts of Faith: The Story of an American Muslim, the Struggle for the Soul of a Generation) என்னும் சுயசரிதை புத்தகத்திற்காக லூயிஸ்வில்லி கிராவிமேயர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் முஸ்லிம் என்ற பெருமையையும் அபு படேல் பெற்றுள்ளார். 

உலகம் முழுவதும் இருந்தும் மதநல்லிணக்க விருதுக்காக 67 பேர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சிகாகோ நகரில் ‘இன்டர் ஃபெய்த் யூத் கோர்’ என்னும் இளைஞர் இயக்கத்தையும் அபு படேல் நடத்தி வருகிறார். அதிபர் ஒபாமாவின் மதநல்லிணக்க ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்

ஆப்கானிலிருந்து யு.எஸ். ஓட்டமெடுக்கவில்லை: ஹிலாரி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓட்டெடுக்கவில்லை என்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். 

வருகிற 2011 ஆம் ஆண்டு முதல் திரும்பத் தொடங்கிவிடும் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹிலாரியிடம், ஆப்கானிஸ்தானை கைகழுவிவிட்டு அமெரிக்கப் படைகள் ஓட்டமெடுக்கிறதா? என கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஹிலாரி, "நிச்சயமாக இல்லை, இதனை நான் மிகவும் அழுத்தமாக கூற விரும்புகிறேன்" என்றார்.

"ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த எங்களது ஆய்வு மிகச்சரியானதே என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மிக ஆபத்தான காலக்கட்டத்தில் நாங்கள் நுழைந்தோம்.அங்கு நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டாலும், பொறுப்புணர்வுடன் நாங்கள் செயல்பட்டோமே தவிர ஓடிவிடவில்லை" என்று ஹிலாரி மேலும் தெரிவித்தார்

பிரேசில்: நிலச்சரிவில் 15 பேர் பலி

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பலியாகினர். 

கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த கன மழை காரணமாக சா பாலோ நகரின் கிழக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஐந்து குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்த குழந்தைகளின் வயது 5 முதல் 14 வயது வரை இருக்கும் என மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நேபாளம்: காவல் துறையை கண்டித்து 'பந்த்'

நேபாளத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து ஐந்து மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள கைலாலி மாவட்டத்தின் வனப்பகுதியிலுள்ள அரசு நிலத்தை மாவோயிஸ்டுகள் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் வீடு இல்லாத ஏழை மக்களாவர்.

அரசு உத்தரவைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு சென்றனர். 

அப்போது அங்கிருந்து காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் மறுத்தனர்.இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 30 க்கும் அதிகமானோர் காயமுற்றனர். 

இந்நிலையில், காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து சுற்றுப் பகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது. 

இதன் காரணமாக அம்மாவட்டங்களில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தொடர்ந்து அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே பாதுகாப்பு படையின் நடவடிக்கையை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு மாவோயிஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது

ஆஸி. நோக்கிச் சென்ற மேலும் ஒரு அகதிகள் படகு வழிமறிப்பு

ஆஸ்ட்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக அகதிகளை சட்ட விரோதமான முறையில் ஏற்றிச்சென்ற மேலும் ஒரு படகு ஆஸ்ட்ரேலிய கடற்பரப்பில் வைத்து இடைமறிக்கப்பட்டது.

இப்படகில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 53 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவின் சுங்கப் பகுதிக் கப்பலான "ஓசியானிக் வைக்கிங்" இப்படகை இடை மறித்து தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு ஆஸ்ட்ரேலியாவால் இடைமறிக்கப்படும் 50 ஆவது அகதிகள் கப்பல் இதுவாகும்.

இப்படகில் இருந்த பயணிகள் 53 பேர் மட்டுமல்லாது 4 மாலுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருமே கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக ஆஸ்ட்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரனில் விக்கிரமசிங்க மீண்டும் இந்தியா பயணம்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க மீண்டும் இந்தியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பயணத்தை அடுத்து அவர், ஐரோப்பிய நாடுகளுக்கான 5 நாள் பயணத்தையும் மேற்கொள்ள இருப்பதாக என்று அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

ஏற்கனவே பிரிட்டனில் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

இலங்கையிடம் இந்திய மருந்துவக் கம்பனிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரிக்கை

ந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துப் பொருற்களின் உள்ளே உடைந்த கிளாஸ் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரசு அந்த கம்பனிகளின் மருந்துப் பொருட்களை இலங்கையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது.


இந்த தடையை நீக்கக் கோரி தற்போது இந்திய மருந்துக் கம்பனிகள் இலங்கையின் சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளன. அத்துடன் இது தொடர்பாக பேச ஒரு குழு இலங்கைக்கு மிகவிரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலீஸ் கண்ணீர்புகைப் பிரயோகம்

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற உதவி ஆசிரியர்கள் தங்களை நிரந்தரமாக்கக்கோரி நடத்திய ஆர்பாடத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகைப்பிரயோகம் செய்தனர். 


அகில இலங்கை உதவி ஆசிரியர்கள் சங்கம் இன்று சற்று நேரத்துக்கு முன்னர் தங்களது பதவிகளை நிரந்தரம் செய்யுமாறு அரசைக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6 ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.

இன்று ஆறு ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் கட்டுப் பணங்களை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது இவர்கள் ஆறுவரும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்தே எதிர்வரும் ஜனவரி 26ல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது

புலிகளின் கப்பலும் வங்கிக் கணக்கும் கே.பி.

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையில் விசாரிக்கப்பட்டுவரும் கே.பி என அழைக்கப்படும் கே.பத்மநாதன் புலிகளுக்கு ஐந்து கப்பல்களும் 600 வங்கிக் கணக்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார் அத்துடன் அவைகளை முடக்குவடதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

வடக்கு அபிவிருத்தியில் பங்குபற்றுங்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி யாழ்பாணப் பல்கலைக்கலகத்தில் நடைபெறவுள்ள போரினால் பாதிக்கப்பட்டு சிதவடைந்துள்ள யாழ்பாணத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலுக்கு புலம்பெயர் தமிழர்கள் அரசினால் அழைக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான அழைப்பு வடக்கு அபிவிருத்தி சமூகசேவைகள் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் விடுக்கப்பட்டுள்ளது.  இதன் நோக்கம் வடக்கின் நிலை பற்றி புலம்பெயர் மக்களுக்கு தெரியப்படுத்துவதும் அதன் அபிவிருத்தி பணிகளில் அவர்களை இணைத்துக் கொள்வதுமாகும்..


இந்த நிகழ்வில் வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தங்களின் திட்ட அறிக்கைகளை கலந்து கொள்ளும் புத்திஜீவிகள் அமைச்சிக்கு சமர்ப்பிக்க முடியும்.


இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில் “ இது  நாம் அனைவரும் ஒன்றினைந்து வடக்கை கட்டியெழுப்புவதற்கான நேரமாகும். அரசியல் பாகுபாடுகள் பாராட்ட இது தருணம் அல்ல. யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து புலம்பெயர்ந்த வைத்தியர்கள், பெறியியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் தமது நாடுகளுக்கு திரும்பி தமிழ் மக்களின் சுவிட்சித்திற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. புலம்பெயர் தமிழர்கள் திரும்பி வந்து அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான நேரம் இது அதனை அவர்கள் இழக்க கூடாது என்றார்.


இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அமைச்சரின் அலுவலகத்தை இந்த தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளலாம். 00 94-212 229 824

பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு.


பர்மாவைச் சேர்ந்த 12 மீனவர்கள் கிழக்குப்புற கடற்கரையில் வைத்து தத்தளித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கைச் சேர்ந்த 'சேனக 8' என்ற மீன்பிடிக்கப்பலினால் அவதானிக்கப்பட்டு கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கடற்படையினரின் விசேட மீட்புப் படகுகளின் மூலம் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வைத்திய உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு திருகோணமலை கடற்படைத்தளத்தில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஈராக் டி.வி.யில் சதாம் உசேன் ; மக்களிடையே பரபரப்பு

சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என ஈராக் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. 

ஈராக்கில் பக்ரீத் பண்டிகை அண்மையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனையொட்டிய விடுமுறை தினமான கடந்த சனிக்கிழமையன்று, அங்கு ஒளிபரப்பாகும் தொலைஜக்காட்சி ஒன்றில், தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேன் திடீரென தோன்றினார். 

தோன்றியது மட்டுமின்றி ஈராக் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.தூக்கிலிடப்பட்ட 3 ஆவது ஆண்டு நினைவு நாளன்று, அவர் ஆற்றிய உரைகளை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.மேலும் சதாம் உசேன் இராணுவ உடையிலும், சூட்- கோட் உடையிலும் தோன்றிய புகைப்படங்களும், அவர் வெள்ளை குதிரையில் கம்பீரமாக வந்த காட்சியும் அடிக்கடி அன்றைய தினம் ஒளிபரப்பப்பட்டது. 

இது ஈராக் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது உரையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது யார் என்ற மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில், சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி.சேனல் தொடங்கியிருக்கலாம் என ஈராக அரசு தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தின்போது சதாம் உசேன் 'பாத்' என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்தார்.அந்த கட்சியினர் புதிய டி.வி.யை தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. 

சிரியா நாட்டில் உள்ள மாஸ்கஸ் நகரைச் சேர்ந்த முகமது ஜர்போயா என்பவர் இந்த டி.வி.யின் தலைவர் என்றும் கூறப்படுகிறது

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதியையே ஆதரிக்க வேண்டும் : அமைச்சர் கருணா

"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல், மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னெடுத்து வருகிறார். 

குடாநாட்டுடன் தென்பகுதியை இணைக்கும் ஏ-9 வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. யாழ். குடாநாட்டுக்கான ரயில் பாதைகளை அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மீன்பிடி, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இத்தருணத்தில் நாம் உங்களுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கே எமது ஆதரவு என்பதை உணர்த்த வேண்டும். ஒரு வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது என வடக்கு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோர் முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டவர். இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்

வீரகேசரி இணையத்தளம்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முயற்சி தோல்வி

காமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாட்டை வருகிற 2011 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.அம்மாநாட்டை ஆஸ்ட்ரேலியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ட்ரினாட் அன்ட் டுபாக்கோவில் நடைபெற்ற காமன்வெல் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

2011 ஆம் வருட மாநாட்டை இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்ட போதிலும், மனித் உரிமைகளை மதிக்காத அந்நாட்டில் இம்மாநாட்டை நடத்த பிரிட்டன், கன்டா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சி பலனளிக்காமல் போனது.

இதனால் அடுத்து 2013 ஆம் வருட மாநாடு இலங்கையில் நடைபெறலாமென நம்பப்படுகிறது. 

காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் அரசு தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தும் உச்சி மாநாட்டில் காமன்வெல்த் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆராயப்படுவது வழக்கம்.

ஆஸ்ட்ரேலியா, காமன்வெல்த் உச்சி மகாநாட்டை இதற்கு முன்னர் இரு தடவைகள் நடத்தியுள்ளது.கடைசியாக 2002 ஆம் ஆண்டில் குயூன்ஸ்லடன் நகரிலுள்ள கூலம் என்ற இடத்தில் அந்நாடு இந்த மகாநாட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக 2011 இல் நடக்கவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புவது என்ற காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் நோக்கங்கள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு நாட்டிலேயே இம்மாநாடு நடக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியிருந்தார்.அதேபோன்று கனடா அரசாங்கமும் இலங்கையில் இம்மாநாட்டை நடக்க தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. 

காஅன்வெல்த் நாடுகளின் அங்கத்தினராக இருந்த பிஜி, பாகிஸ்தான், நைஜீரியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசாங்கம், ராணுவத்தினர் மூலம் கட்டவிழ்த்துவிட்ட மனித உரிமை மீறல்கள், வன்முறைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

காலக்கெடு முடிந்து விட்டது ; ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் மேலும் புதிய 10 யுரேனிய செறிவூட்டல் நிலையங்களை அமைக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச அணு நெறிமுறைகளை கடைபிடிக்க ஈரானுக்கு விதிக்கப்பட்ட்ட கால வரையறை முடிந்துவிட்டதாக கூறியுள்ளார். 

ஈரான் புதிதாக 10 யுரேனிய செறிவூட்டல் உலைகளை அமைக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மை எனில் அது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை மீறிய கடுமையான குற்றமாகவும், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள ஈரான் தேர்ந்தெடுத்த மற்றொரு உதாரணமாகவும் கருதப்படும். 

யுரேனிய செறிவூட்டல் உலைகளை அமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உள்ளதாக சர்வதேச சமுதாயம் தெளிவாக கூறியுள்ளது.அதே சமயம் அந்த உரிமைகளுக்கென்று சில பொறுப்புகள் உள்ளன " என்று அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கை அதிபர் தேர்தலை சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்

வருகிற ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலை சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள் என்று இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பில் மிக வலுவான வேட்பாளராக முன்னாள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா களமிறங்கியுள்ளார். 

இதனால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்றும், தேர்தலில் வெற்றிபெற ராஜபக்ச தரப்பு முறைகேடுகளிலும், அராஜகங்களிலும் ஈடுபடலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று பொன்சேகா தரப்பும் பதிலடிக்கு தயாராகவே உள்ளதாக கூறப்படுகிறது. 

இத்தகைய சூழ்நிலையில் அதிபர் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தாம் உறுதிபூண்டுள்ளதாகவும், தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன், காமன்வெல்த் நாடுகள் மற்றும் ஐ.நா. வைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் கொழும்பு வரவுள்ளதாகவும் திசநாயகே இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.