பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்கள் ஐந்து பேருக்கு அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்திலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சர்கோதா என்ற இடத்தில் இரண்டு பாகிஸ்தானிய அமெரிக்கர்கள் உள்ளிட்ட 5 அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர முயற்சித்துக் கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஐந்து பேரிடம், எப்பிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அவர்களுக்கு அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதல் நடத்துவது தொடர்பாக அல் - காய்தா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தித்துப் பேச இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் பாகிஸ்தான் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment