வருகிற 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறி செயல்படும் ஒரு நாட்டில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மேற்கிந்திய தீவில் தொடங்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் அவர் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆஸ்ட்ரேலியாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாஙங்ம் வன்னியில் மேற்கொண்ட மனிதப்பேரழிவுகள் குறித்தும் அதனை தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment