இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியை தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார் தற்போதைய ஜனாதிபதி.
அதன்படி ஜனவரி 23 ல் அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே அதிபர் தேர்தலை வருகிற ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த இலங்கை தேர்தல் ஆணையம், இன்று ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இத்தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து எதிர்கட்சிகளின் சார்பில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரைத்தவிர புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, தாமும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment