ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா 23 இராணுவ வாகனங்களையும் 110 இராணுவத்தினரையும் உத்தியகபூர்வமற்ற முறையில் பாவிக்கிறார் என்று இன்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தெரிவித்திருப்பதாவது.
66 இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி தனது வீட்டுக்கு நுழைபவர்களையல்லாமல் தான் தங்கியிருக்கும் கட்டிடத்துக்குள் நுழையும் பெண்களை பரிசோதிப்பதற்காக ஐந்து பெண் படை வீராங்கனைகள் கேட்டிருந்தார் அது அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத ஒரு பி.எம்.டவ்லியு கார் மற்றும் இரண்டு இராணுவ லேன் ரோவர் ஜீப்கள் நான்கு இராணுவ சாரதிகளுடன் அவரது தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தேவையான துப்பாக்கிகள், சமிக்கைகள், தேவையான தொடர்புசாதன வசதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. என்று வீரதுங்கையின் கடிதம் கூறுகின்றது.
ஆனால் ஜெனரல் பொன்சேகா பத்து 9 எம்.எம் பிஸ்டோல்கள் காமாண்டர்களுக்காகவும், இன்னும் பத்து சிறிய Ushi/Hk MP5 ஆயுதங்கள், 72 டி-56 துப்பாக்கிகள் மற்றும் பத்து கையில் பாவிக்கக் கூடிய வோக்கி டோக்கிகளையும் தனது பாதுகாப்புக்காக கோரியிருந்தார்.
(கொழும்பு பக்கம்)
No comments:
Post a Comment