Thursday, 26 November 2009

கனடாவில் சீமான் கைது!

கனடாவில் இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த இந்திய பட இயக்குனர் சீமான் கனடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் நிகழ்த்திய உரையில் பயங்கரவாதத்தை தூண்டும் கருத்துக்கள் காணப்பட்டதை தொடர்ந்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 



கைவிலங்கிட்டு கனடிய குடிவரவு குடியகல்வு தடுப்பு நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார் அவரை அங்கு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர் நாடுகடத்தப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

இதே வேளை கனடாவில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வில் இன்று இரவும் சீமான் உரையாற்ற இருந்தார் என்றும், நாளை நடைபெறும் நிகழ்விலும் உரையாற்ற இருந்தார் என்றும் கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கனேடிய அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் சீமான் ஆற்ற இருந்த உரையை தடுப்பதுவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதற்கான பிரதான காரணம் எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment