ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென எமது கட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது.அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம்.முதலில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதன் பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றார்.இதன் போது புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர விளக்கமளிக்கையில் கூறியதாவது;எமது பொது வேட்பாளர் இராணுவ சீருடையை களைந்து அரசுக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதியாகவுள்ளார்.சமையல் அறையிலிருந்த திருமதி பண்டாரநாயக்கவால் நாட்டை நிர்வகிக்க முடியுமாயின் ஏன் சரத் பொன்சேகாவக்கு முடியாது.
ஐக்கிய தேசிய முன்னணி மீதும் பொது வேட்பாளர் மீதும் புலி மற்றும் தேசத்துரோகியென முத்திரை குத்த முற்படவேண்டாமென அரச கோருகின்றேன். இதை மீறினால் நாம் கையைத் தூக்கி பேச வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment