Friday 27 November 2009

நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் வழக்கறிஞர் கஸாப்

மும்பைத் தாக்குதல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி அஜ்மல் கஸாப்பிற்காக வாதாடும் அப்பாஸ் கஸ்மி, வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் இன்று நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். 

மும்பைத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை அரசு தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பற்றி தனக்கு கவலையில்லை என்று அஜ்மல் கஸாப் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் கஸ்மி நேற்றைய வழக்கு விசாரணையின் போது கூறினார். 

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி எம்.எல்.தஹலியானி, “கஸ்மி ஒரு பெய்யர் எனக் குறிப்பிட்டார். 

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய கஸ்மி, “மும்பைத் தாக்குதல் வழக்கு சரித்திரச் சிறப்பு வாய்ந்தது என்பதால், கஸாப்புக்கு ஆதரவாக என்னால் முடிந்தவரை சிறப்பாக வாதாடி வருகிறேன். நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் போது ஏற்பட்ட சூடான விவாதம் காரணமாக நான் பொறுமையிழந்து சில வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளேன்” என்றார். 

கஸ்மியின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.எல்.தஹலியானி, கஸ்மி ஒரு பெய்யர் என்று தாம் கூறியதையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment