இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதியளிக்கும் சட்ட முன்வரைவு பிரான்ஸ் தேச அவையில் நிறைவேறியது.

இத்தகவலை வெளியிட்ட இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரகம், “இந்தியா- பிரான்ஸ் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளிக்கும் சட்ட வரைவை பிரான்ஸ் தேச அவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்திய-பிரான்ஸ் அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதியளிக்கும் சட்டத்தை அந்நாட்டின் செனட் அவை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அணு உலைகளை இந்தியாவில் நிறுவ, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் ஜைதாப்பூரில் பிரான்ஸ் நாட்டின் 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைக்க, பிரான்ஸ் நாட்டின் ஆரேவா நிறுவனத்திற்கு இந்தியா ஒப்பந்தம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No Response to "இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்"

Post a Comment