யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தங்கள் சொந்த இடங்களுகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்றுடன் யாழ்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் அமைவரும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்தப்பட்டுள்ளதாக இன்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் படி யாழ்பாணத்திலிருந்து குடிபெயர்ந்த மக்கள் எவரும் மெனிக் பாம் முகாமில் இல்லை என அது தெரிவித்துள்ளது.


மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சின் தகவல்களின்படி இதுவரை வவுனியா, மன்னார், புல்மூடை (திருகோணமலை) யிலிருந்து 59,475 பேர் யாழ்பாணத்தில் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.காலித்தீன் தெரிவிக்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நவம்பர் 25 யில் 121,617 ஆக குறைந்துள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறையில் இருந்து இடம்பெயர்த அனைவரும் மீள் குடியேற்றப்பட்டு அவர்கள் சாதாரண வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.
மீதியாக முகாம்களில் உள்ளவர்களுக்கும் டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

No Response to "யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தங்கள் சொந்த இடங்களுகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்."

Post a Comment