சவூதியில் மழை வெள்ளம் : 77 ஹஜ் பயணிகள் பலி !

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா அருகே நேற்று பெய்த திடீர் மழை காரணமாக புனித ஹஜ் யாத்திரை வந்த 77 ஹஜ் பயணிகள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் இருந்து சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் 3 லட்சத்திற்கு அதிகமான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், கடைசி நாளான நேற்று மெக்காவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் உள்ள ஜித்தா நகரில் பலத்த மழை பெய்தது. 

இதனால் வீதிகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பல வீடுகள் இடிந்து நாசமாயின.பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மெக்கா செல்லும் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த் மழை வெள்ளத்தில் சிக்கி ஹஜ் பயணிகள் 77 பேர் உயிரிழந்தனர்.இவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். 

மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தத் தகவலை ஜித்தா சிவில் பாதுகாப்பு தலைவர் அப்துல்லா அல்-அமீர் தெரிவித்தார். 

மெக்கா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன

No Response to "சவூதியில் மழை வெள்ளம் : 77 ஹஜ் பயணிகள் பலி !"

Post a Comment