ஆஸ்ட்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக அகதிகளை சட்ட விரோதமான முறையில் ஏற்றிச்சென்ற மேலும் ஒரு படகு ஆஸ்ட்ரேலிய கடற்பரப்பில் வைத்து இடைமறிக்கப்பட்டது.
இப்படகில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 53 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவின் சுங்கப் பகுதிக் கப்பலான "ஓசியானிக் வைக்கிங்" இப்படகை இடை மறித்து தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு ஆஸ்ட்ரேலியாவால் இடைமறிக்கப்படும் 50 ஆவது அகதிகள் கப்பல் இதுவாகும்.
இப்படகில் இருந்த பயணிகள் 53 பேர் மட்டுமல்லாது 4 மாலுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருமே கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக ஆஸ்ட்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment