Saturday, 5 December 2009

ஆப்கானிலிருந்து யு.எஸ். ஓட்டமெடுக்கவில்லை: ஹிலாரி

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓட்டெடுக்கவில்லை என்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். 

வருகிற 2011 ஆம் ஆண்டு முதல் திரும்பத் தொடங்கிவிடும் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹிலாரியிடம், ஆப்கானிஸ்தானை கைகழுவிவிட்டு அமெரிக்கப் படைகள் ஓட்டமெடுக்கிறதா? என கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஹிலாரி, "நிச்சயமாக இல்லை, இதனை நான் மிகவும் அழுத்தமாக கூற விரும்புகிறேன்" என்றார்.

"ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த எங்களது ஆய்வு மிகச்சரியானதே என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மிக ஆபத்தான காலக்கட்டத்தில் நாங்கள் நுழைந்தோம்.அங்கு நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டாலும், பொறுப்புணர்வுடன் நாங்கள் செயல்பட்டோமே தவிர ஓடிவிடவில்லை" என்று ஹிலாரி மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment