Tuesday, 15 December 2009

புலி அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைய வந்ததை உறுதிப்படுத்துகிறது ஐ.நா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்ததை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜோன் ஹோமஸ், சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே இதனை உறுதிபடுத்தியுள்ளார். 

விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவதற்கு விரும்புவதாக ஐ.நா. சபைக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், அது குறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜோன் ஹோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் பாதுகாப்பான முறையில் சரணடைவதை தம்மால் உறுதிப்படுத்த முடியாமல்போனதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் ஐ.நா. அதிகாரிகள் யுத்த பிரதேசத்தில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சரணடைய விரும்பியவர்கள் பின்னர் உயிரிழந்து விட்டதாக ஊடகங்கள் மூலமாகத்தான் தாம் அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அவர்கள் எவ்வாறு கொல்லப்பாட்டர்கள் என்பது குறித்தோ அவர்களை யார் படுகொலை செய்தார்கள்; எவ்வாறு அந்த சம்வம் இடம்பெற்றது என்பது குறித்தோ ஐ.நா. சபைக்கு தெரியாது என்றும் ஜோன் ஹோமஸ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment