''இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்தால் தமிழர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம;'' என்று முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறினார்.
இதற்கு பதில் அளித்த ரனில், டெல்லியில் இந்திய அயலுறவுத்துறை அமைச்சர், மூத்த அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன் என்றார்.இலங்கையில் தமிழர்கள் நிலை எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, இலங்கையில் தமிழர்கள் பிரதான முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் சுதந்திரமாக நடமாடவில்லை. இன்னும் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை மோசமாக தான் உள்ளது.
இலங்கை தேர்தலில் நாங்கள் பொது வேட்பாளராக பொன்சேகாவை அறிவித்து உள்ளோம். இது ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன்சேகா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாங்கள் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும், ஐ.நா.சபையின் கோட்பாடுகளையும் கொண்டு, தமிழர்களை அவர்களின் சொந்த ஊர்களில் தங்க வைத்து சுதந்திரமாக செயல்பட வைப்போம். தற்போது அவர்கள் வன்னி பகுதிகளில் தங்கி உள்ளனர் என்றார்
இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது பற்றி கேட்டதற்கு, இலங்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிபர் ஆட்சி முறையை அகற்றி விடுவோம். பாராளுமன்றம் ஏற்படுத்தி விரைவில் தேர்தல் நடத்தப்படும். புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட பல பிரச்சனைகளை தீர்வு காணப்படும்.
பத்திரிகை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட ஜனநாயக ஆட்சி முறையை ஏற்படுத்துவோம். இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்ற தேவையான குழுக்களை இந்தியா, ஐரோப்பிய நாடுகள் அனுப்புவதாக கூறியது. ஆனால் தற்போது உள்ள இலங்கை அரசு இந்த குழுக்களை அனுப்ப வேண்டாம். கண்ணிவெடிகளை அகற்ற கருவிகளை வாங்க பண உதவி கேட்கிறது. பண உதவிகளை இந்தியா உள்பட பல நாடுகள் ஏற்காது என தெரிகிறது என்றார்ரனில
No comments:
Post a Comment