எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க இனியும் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்ப உறுப்பினர்களைப் பற்றியோ களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசிவந்தால், தாமும் எல்லை மீறி பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இலங்கை அதிபர் ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த சனிக்கிழமையன்று வெலிசரையில் நடைபெற்ற போது அதில் பேசிய ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சவின் குடும்ப அரசியலில் உள்ள ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்ச, மலிக் சமரவிக்ரமவை தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்கண்ட எச்சரிக்கையை ரனிலிடம் தெரிவிக்குமாறு மிரட்டியுள்ளார்.
எஸ்.பி.யை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தாம் எண்ணியிருக்காத போதிலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலடி கொடுப்பதற்காக எஸ்.பி.யை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்பின்னல் ரணில் விக்ரமசிங்க எல்லைமீறி செயற்படுவாராயின், தானும் எல்லைமீறி செயற்பட நேரிடும் என ராஜபக்ச அப்போது மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment